ரஜினியின் அரசியல் 'எண்ட்ரி': கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கோவை, டிசம்பர் 31

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சுமார் 22 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த்  அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிக்கட்சி துவங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.

முன்னதாக வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற கொடியுடன்  ஊர்வலமாக வந்த ரசிகர்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய ரசிகர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இது குறித்து இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கூறுகையில், 'போலியான அரசியல்  முடியட்டும் ஆன்மீக அரசியல் விடியட்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரவேற்கத்தக்கது.  தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு அருள் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். 

மேலும் ஆன்மீக அரசியல் மலருவதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அவருக்கு உறுதுணையாக இந்து மக்கள் கட்சி இருக்கும்' என்றார்.

கோவை மாவட்ட ரசிகர் மன்ற  தலைவர் கதிர்வேல் பேசுகையில், '35 ஆண்டுகள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் ஏற்படும். இன்றையை அரசியல் நிலையின் தன்மையை காவல்படையின் மூலம் இந்த தேசத்திற்கு மீண்டும் விடுதலை பெற்று தருவார். 

ஆன்மீக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியல் அல்ல. தெய்வீக , தெய்வ நம்பிக்கையுடைய அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட  உதவியாக இருக்கும். தெய்வத்தால் நாடு தூய்மை அடையும், தெய்வம் போன்ற மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்' என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...