அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை, ஜனவரி 1

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 6-ம் தேதியன்று அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட கடந்த சில காலமாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, டிடிவி தினகரன் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1963ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அச்சகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 100 குடும்பங்களுக்கும் குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கப்பட்ட இந்த அரசு அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...