ரஜினியின் புதிய கட்சிக்கு அதிமுக அமைச்சர் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 03:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, புயல் என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற எம்எல்ஏ கூட்டம் வழக்கமான கூட்டம்தான். சட்டமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சட்டமன்றத்திற்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கட்சி கொள்ளைகளை அறிவித்த பின்பே கருத்து கூற முடியும்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற திட்டங்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை உள்ளது. அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்ப கால பணிகள் நடைபெற்று வருகின்றது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து நீண்டகால திட்டமாக செயல்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், மெட்ரோ ரயில் திட்டமும், அவினாசி சாலை பாலம் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். ஆர்.கே.நகரில் குடிநீரில் கழிவுகள் கலந்து வருவதாக டிடிவி தினகரன் புகார் தெரிவித்ததாகத் தகவல் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...