மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : தள்ளிப்போகும் லாலுவின் தண்டனை விபரம்

ஜனவரி 04

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை அறிவிப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.  ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு, முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ராஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். 

இதேபோல, தியோஹர் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்த வழக்கின் விசாரணையும் தனியாக நடந்தது. இதில், லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் அப்ரூவர் ஆகிவிட்டார். 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால்சிங் தீர்ப்பளித்தார். பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தண்டனை விவரம் இன்று (ஜன.,04) வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி, ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இன்று பிற்பகல் நீதிமன்ற அறையில் வழக்கில் தொடர்புள்ள வழக்கறிஞர்கள் தவிர பிற வழக்கறிஞர்களை வெளியேறும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனால், தண்டனை விவரத்தை உடனே வெளியிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தண்டனை அறிவிப்பை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...