20 சதவிகித வளர்ச்சியை எட்டிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்- தலைவர் பெருமிதம்

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 05

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், 2017 டிசம்பர் 31ம் நாளுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 20 சதவிகித வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி.சீனிவாசன் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.14,000 கோடியாக இருந்த வணிகம் இந்த ஆண்டில் ரூ.16,800 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான இந்திய அளவிலான வணிகம் 26 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொதுமக்களிடையே காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும் அளவு அதிகரித்துள்ளதின் காரணமாக இன்னும் சில காலத்துக்கு மேலும் கூடுதலான வணிக வளர்ச்சியை எட்ட முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் கோடி வணிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டமொன்றை வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நான்கு கோடி பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான பிரீமியம் தொகை ரூ.1,200 கோடியாகும்.

வாடிக்கையாளர்களின் மேலான ஒத்துழைப்பின் காரணமாக இந்நிறுவனம் பொதுக் காப்பீட்டுத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பீடு செய்துள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சமீபத்தில் டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தையும் காப்பீடு செய்திருக்கிறது.

செப்டம்பர் 2017ல் முடிவடைந்த முதல் அரையாண்டில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ரூ.1,248 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 161 சதவிகிதம் அதிகமாகும். 2,24 அளவிலான கடன் தீர்க்கும் சக்தியுடனும் ரூ.3,7000 கோடி நிகர மதிப்பிலான சொத்துக்களுடனும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் உறுதியான நிறுவனமாக விளங்குகிறது".

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை குறிச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையை ஜி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். விழாவில் தலைமை மண்டல மேலாளர் என். வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...