சிறுத்தையை சுருக்கு வைத்துக் கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை

நீலகிரி, ஜனவரி 05

கோத்தகிரி பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக்கு சுருக்கு கயிறு வைத்து கொன்றவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று சிறுத்தை ஒன்று மர்மமாக உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வனச்சரகர் சீனிவாசன், கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் இறந்து போனது 7 வயது மதிக்கத்தக்கப் பெண் சிறுத்தை எனவும், சுருக்கு வைத்து கொன்றதையும் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கப்பிள்ளை என்பவரது மகன் ராஜன் (40) என்பவரிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை சுருக்கு வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர், இது குறித்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தற்போது நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...