நீலகிரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி, ஜனவரி 05

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 



போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ‌தோல்வியி்ல் முடிந்ததால், நேற்று மாலை முதலே த‌மிழகம் முழுவதும் பெரும்பாபலான பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையி்ல், நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர், கோத்தகிரி, கூடலுார் பகுதியில் நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

இந்த நிலையில், இன்று காலை முதலே குன்னுார், உதகை, கோத்தகிரி, கூடலுார் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் கிராமப் பகுதிக்கு செல்லும் ஆதிவாசி மக்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வு ‌எழுத முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

மேலும், போக்குவரத்து ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் பேருந்த நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு பேருந்து கிடைக்காததால் மாணவ, மாணவிகள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...