கோவை விழா கொண்டாட்டத்தில் வண்ணமயமான ஓவியக் கண்காட்சி

கோவை, ஜனவரி 06

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று யங் இந்தியன்ஸ், கோவை ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் திட்டச்சாலையில் கண்கவர் ஓவியக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் ஏராளமான ஓவியர்கள் பங்கேற்று தங்களுடைய ஓவியங்களைப் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். ஓவியச் சந்தையின் நுழைவாயிலில் பலவண்ண குடைகளின் மேற்கூரை அலங்காரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



கோவையைச் சேர்ந்த ஓவியர் மோகன்ராஜ் இதுகுறித்து கூறுகையில், "20 ஆண்டுகளாக ஓவியங்களை வரைந்து வருகிறேன். ஆயில் பெயிண்ட், அகர்லிக் பெயிண்ட் மூலமாக விதவிதமான ஓவியங்களை வரைந்து வருகிறேன். சிறுவயதிலேயே ஓவியங்களை வரைவதில் ஆர்வம் எனக்குள் உண்டானது. இதுவரை ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளேன். இயற்கை காட்சிகள், பிரபல தலைவர்கள், நமது பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் படங்கள் வரைந்துள்ளேன்.

ஓவியர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். இந்தக் கலை வளர இளம் ஓவியர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.



சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பென்சில் ஓவியர் நாக திவ்யா கூறும்போது:- "ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதற்காக எந்தவித பயிற்சிக்கும் செல்லவில்லை. தானாகவே ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன்.

பென்சில் மூலமாக ஓவியங்களை கருப்பு, வெள்ளை மற்றும் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறேன். இணையதளத்தில் புதிய, புதிய மடல்களைப் பார்த்து அதைப்போலவே வரைவேன். ஓவியம் வரைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் ஓவியங்களின் வருகையால் ஓவியக்கலை கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. இக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஓவியக்கலையைப் பெரும்பாலும் யாரும் ஊக்குவிப்பது இல்லை. ஓவியர்களையும், அவர்கள் வரையும் ஓவியங்களையும் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...