சிறுவாணி நீரைப்போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை ஊர்காவல் படையினர்- மாநகர காவல்துறை ஆணையர் புகழாரம்

கோவை, ஜனவரி 06

சிறுவாணி நீரைப் போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை மாநகர ஊர்காவல் படையினர் என்று ஊர்காவல் படை தின விழாவில் மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.



ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதியன்று ஊர்காவல் படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாநகர ஊர்காவல் படையின் பிராந்திய தளபதி டி.கே. தனசேகர் தலைமையில் மாநகர ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து, அவினாசி சாலையில் உள்ள காவல்துறை சமூகக் கூடத்தில் ஊர்காவல் படை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் பேசுகையில், "2-ஆம் உலகப்போரின் போது தோன்றியது தான் இந்த ஊர்க்காவல் படை. 1963-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் ஊர்க்காவல் படை விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 622 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினரின் பங்கு மிக அதிகமாக இருந்தது. அப்போது, கோவையில் இருந்து மட்டும் 468 பேர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். கோவையை பொறுத்தவரை ஊர்க்காவல் படையினர் சிறந்த தலைமையை பெற்றுள்ளனர். உலகின் மிகச்சிறந்த நீராக சிறுவாணி நீர் உள்ளது. அதன் சிறப்பைப் போலவே கோவை ஊர்க்காவல் படையினரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர்." இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...