கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை மற்றும் பட்டாம்பூச்சிகளைக் காண ஓர் நடைபயணம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை, ஜனவரி 7

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் காடுகளில் பட்டாம்பூச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டது. மேலும், அருகில் உள்ள ஐந்து காட்டுப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் 33 வகையான பறவைகள் காணப்பட்டன. இந்நிகழ்வில், பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன்பிராசாத் கூறுகையில் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சிறுவாணி வரை பட்டாம்பூச்சிகளைக் காண பயணம் மேற்கொள்ளப்பட்டது.



சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கிரிம்சன் ரோஸ், சவுத்தர்ன் டஃபர், இண்டிகோ ஃப்ளாஷ், மெனிடெய்ல் ஓக்புளூ மற்றும் பியர்ரோட் போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் காணப்பட்டன என்றார்.



முன்னதாக இதில், சின்னவேடப்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து ஏரிக் கரையோரத்தில் பயணம் மேற்கொண்டு அரியவகைப் பறவைகள் காண்பித்தனர்.



இந்நிகழ்வில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு இயக்கத்தின் பி.கே.செல்வராஜ் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...