கோவை பாப்பீஸ் ஹோட்டலில் ட்வைலைட் பை நைட் புதிய தென்னிந்திய ரெஸ்டாரண்ட் துவக்கம்

கோவை பாப்பீஸ் ஹோட்டல், ட்வைலைட் பை நைட் என்ற புதிய தென்னிந்திய உணவகத்தை திறந்துள்ளது. இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் கிடைக்கும் உணவே இதன் சிறப்பு. மேலும், கையால் அரைத்த மசாலாக்களை உபயோகிப்பதே இந்த உணவகத்தின் ஷெஃப் ஸ்பெஷல் ஆகும்.

கோவை, ஜனவரி 7

கோவை பாப்பீஸ் ஹோட்டல், ட்வைலைட் பை நைட் என்ற புதிய தென்னிந்திய உணவகத்தை திறந்துள்ளது. இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் கிடைக்கும் உணவே இதன் சிறப்பு. மேலும், கையால் அரைத்த மசாலாக்களை உபயோகிப்பதே இந்த உணவகத்தின் ஷெஃப் ஸ்பெஷல் ஆகும்.

இதன் துவக்க விழாவிற்கு மிஸ் இந்தியா எர்த் 2016-17 மற்றும் பிசினல் பாடி ஸ்கில்பிங் தெரபி நிர்வாக இயக்குநருமான “ஜெயா மகேஷ்” கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.



இதுகுறித்து பாப்பீஸ் ஹோட்டலின் செயல்பாட்டு மேலாளர் ஜெயராம் மற்றும் நிர்வாக ஷெஃப் ராஜா ஆகியோர் கூறுகையில், குழம்பு, காய்கறி, அரிசி, பிரியாணி ஆகியவை மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்டு மண் பாத்திரங்களில் பரிமாறப்படுகின்றன. தோசை, கரி தோசை, ஆப்பம் ஆகியவை வாழை இலைகளில் வழங்கப்படுகிறது. நமது முன்னோர் விட்டுச் சென்ற பழைய பாரம்பரியத்தை மறந்து விடாமல் இருக்கவும், சுகாதார எண்ணமுள்ள மக்களை ஈர்க்கவும் கையால் அரைக்கப்பட்ட மசாலாக்களை வைத்து பழைய பாட்டிகை சமையல் ருசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



இங்கு, பிரதான உணவாக சோலக்கருது வருத்த கறி, அன்னாசி பழ அரைத்த குழம்பு, நெய் கத்திரிக்காய் மசியல் ஆகியவை கிடைக்கும். மேலும், அசைவம் உண்பவர்களுக்கு அரண்மனை கோழி குழம்பு, இரால் தக்கலை தொக்கு, இரால் கொத்தமல்லி புளி கறி, நண்டு ரோஸ்ட், பாட்டியம்மா மீன் குழம்பு ஆகியவை கிடைக்கும்.

ஒவ்வொரு உணவும் ஆரோக்கியமான பொருட்கள், செயற்கை வண்ணம் இல்லாமல், இயற்கை மாறாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று கூறினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...