கோவையில் 15 வயது சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை, ஜனவரி 7

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கபிலேஷ் (15). வீரபாண்டிப்பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற கபிலேஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. 

இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மகன் பள்ளிக்குச் சென்றான். எப்போதும் பள்ளி முடிந்த பின் டியூசன் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால், அன்று நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

பின் பள்ளி மற்றும் டியூசன் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் கபிலேஷ் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகன் குறித்து தகவலறிந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுங்கள் "9786343891" என்றார்.

சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...