கோவையில் இராணுவத் தளவாட உதிரி பாகங்கள் தொழிற்பூங்கா அமைக்க மத்திய அமைச்சரிடம் மாநில அமைச்சர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனை விமானநிலையத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி தமிழக அரசின் சார்பில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

கோவை, ஜனவரி 7

கோவை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனை விமானநிலையத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி தமிழக அரசின் சார்பில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

அப்போது, கோவை மாவட்டத்தில் இராணுவ பாதுகாப்பு தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் செய்யும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

"கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மட்டுமின்றி தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்த வர்த்தக ரீதியாக முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழக மாநிலத்தின் முக்கிய பங்காகவும் திகழ்கின்றது. கோவையில் ஜவுளி எந்திரங்கள், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், ஸ்டீல் மற்றும் பம்ப்செட் உற்பத்தி போன்ற தொழில்கள் மிகுந்த அளவில் உள்ளன. மேலும் தங்கம், வைர நகைகள் தயாரிப்பு கோவையில் பிரசிக்தி பெற்றது. தென்னிந்தியாவிற்கே, உயர்கல்விக்கும், மருத்துவக்கல்விக்கும் புகழ்பெற்ற மையமாக கோவை உள்ளது.

இன்றைய தினம் மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் வருகை மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் சார்பில் தேசிய முதலீடு உற்பத்தி மையம் அமைக்க உதவிடவும், Make in India திட்டம் போலவே Make in Coimbatore என்ற நிலையை உருவாக்கும் வகையில் கோவையில் இராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை வேண்டி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...