ஜெ.மரணம் குறித்த விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் - ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 7

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு வழக்கறிஞர் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நாளை நீதிமன்றத்தின் அறிவிப்பின் போது தான் தெரியும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...