மாநகர சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டால் கைது: போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் பேச்சு

இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை, ஜனவரி 8

இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகரில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி இன்று காலை அவினாசி சாலை அண்ணா சிக்னல் பகுதியில் நடைபெற்றது.



கங்கா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கங்கா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 165 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவினாசி சாலையில் 10 இடங்களில் சாலை பாதுகாப்பு பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்ற மாணவர்கள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

முன்னதாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார். 



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

கோவை மாநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 300 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டிற்கு 1 லட்சம் புதிய வாகனங்கள் கோவையில் பதிவு செய்யப்படும் சூழலில் சாலை விரிவாக்கப்படாத சூழல் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்.



ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்குபவர்களே அதிக அளவில் உள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் உபயோகித்துக் கொண்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.



இது தொடர்பாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

மாநகரில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார், கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ். ராஜசேகரன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...