காளை மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 8

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ந.சக்திவேல் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பண்டை காலத்தில் விவசாய முறைக்கும், கலப்படம் இல்லாத உணவு உற்பத்தி முறைக்கும் நம் நாட்டு மாடுகள் பெரிதும் உதவியுள்ளன. கால்நடைகள் மூலம் வரும் வருவாய் விவசாய வாழ்க்கை முறைக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்த நிலையில் தற்போது நாட்டுமாடுகள் அழியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தடுக்க நாட்டு மாடு வளர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வளர்ந்து வரும் இக்காலத்திற்கு தமிழக அரசு நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை புதியதாக உருவாக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி வழங்கி நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், நாட்டு மாடு வளர்ப்பு மூலம் உற்பத்தியாகும் பால் கொள்முதலும், எதிர்காலத்தில் ஆவின் கொள்முதல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். நகரத்திலும், கிராமப் புறங்களிலும் வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்புத் திட்டம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, காங்கயம் இன கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...