தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது- கி. வீரமணி

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, ஜனவரி 8

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை லட்சுமிமில் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் திராவிடர் கழகத்தின் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மட்டுமே நாத்திகர் இயக்கம் பெரியாரினால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு மண்டல கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக்கோரியும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.

ஆன்மீக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. ஆன்மீகம் என்பது சாமியார் வேலை. ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா ?. 

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், போக்குவரத்துத் துறையினை தனியார்மயமாக்கலாம் என்ற நீதிமன்ற கருத்து குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை. நீதிமன்றத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா என கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...