82-வது வார்டில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி மாவட்ட ஆட்சிரிடம் மனு

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 8

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82-வது வார்டு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, அந்த வார்டின் மையப்பகுதியான கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, முறையான கழிப்பறை வசதியில்லாமல் பொதுமக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனு குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

”மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கழிவறைகள் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாவட்டத்தில் சிறந்த மாநகராட்சி என்ற பெருமையை பெற்ற கோவை மாநகராட்சியில், இந்த நிலை இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொண்டு கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...