ஐ லீக் கால்பந்து போட்டி : நெரோகா அணியோடு நாளை சென்னை பலப்பரீட்சை

கோவை, ஜனவரி 08

ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது 9-வது லீக் ஆட்டத்தில் நெரோகா அணியை நாளை சந்திக்கிறது. 

இது தொடர்பாக நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் கூறுகையில், இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 2 சமன், 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளோடு சென்னை அணி உள்ளது. நாளை நடக்கும் மலின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் வீரர்கள் விளையாடுவார்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில், சூப்பர் 4 லீக் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார். 

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்லோவேக்கியா வீரரும், சென்னை அணியின் கோல்கீப்பருமான ஒய்ரோஸ் கூறுகையில், கடந்தமுறை நேரு விளையாட்டரங்கில் விளையாடும்போது, சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது.  தற்போது, ஓரளவுக்கு மைதானம் தயார் செய்யப்பட்டு, விளையாடத் தகுதி பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போட்டிகள் நடைபெறுவதால், போக்குவரத்து தூரமும், போட்டிக்கான இடைவெளி நேரமும் இல்லாதது, வீரர்களை சோர்வடையச் செய்கிறது. 

ஐரோப்பா கண்டத்தில் விளையாடுவதை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது கோடையின் தாக்கல் அதிகம் உள்ளதை உணர்கிறேன். என்றார். 

கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, இந்தியாவின் பழமையான, பலம் வாய்ந்த அணியான மோகன் பகன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் நெரோகா அணிக்கு எதிரான 9-வது லீக் ஆட்டத்திலும், சென்னையின் வெற்றி ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...