மானிய விலையில் வீட்டுத் தோட்டக்காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்குதல்

கோவை, ஜனவரி 08

தக்காளி, புடல், பாகல், பீர்க்கன் உள்ளிட்ட கீரை வகைகள் உள்ளிட்ட  வீட்டுத்தோட்ட விதைக் காய்கறி பாக்கெட்டுகள் கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முயற்சியாக வீட்டுத்தோட்ட காய்கறி விதைப் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. 

அதன்படி, நடப்பாண்டு ரூ. 20 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய 22,000 விதைகாய்கறி பாக்கெட்டுகள்  கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதி பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ. 8 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ. 12 செலுத்தி விதைப்பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென நடப்பாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ. 1,760 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி விதைபாக்கெட்டுகள் வரை பெறலாம். இப்பாக்கெட்டுகளை கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்றுப் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...