திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் கவுரவிப்பு

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை, ஜனவரி 9

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தி வரும் சீர்மிகு நகர திட்டங்கள் (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னை குடிநீர் வாரிய கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



ஆய்வுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக, திரு. எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறந்து விளங்கிய மாநகராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாநகராட்சி ஆணையாளர் கே.விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனிஷ் சேகர், திருச்சி மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



தமிழகத்திலுள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் தினந்தோறும் 7,585 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேரகமாகின்றது. இதில், மக்கும் குப்பைகள், மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகள் அனைத்தும் அடங்கும். திடக்கழிவு மேலாண்மையின் ஒரு அங்கமாக மக்கும் கழிவுகள் அனைத்தும் பரவலாக்கப்பட்ட நுண் உரமாக்கும் மையங்கள் மூலம் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.  சேகரிக்கப்படும் மொத்த கழிவுகளில் சுமார் 2,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளான பிளாஸ்டிக் கழிவுகள் வாரந்தோறும் சேகரிக்கப்பட்டு வந்தது. 

நகராட்சி நிர்வாக ஆணையரின் வழிகாட்டுதலுக்கிணங்க சேகரம் செய்யப்பட்ட மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் மொத்தக்கழிவு வியாபாரிகளிடம் விற்கப்பட்டு, அதன் வாயிலாகப் பெறப்படும் தொகையானது மாநகராட்சி / நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 28,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் செய்து, ரூ.8.00 கோடி விற்கப்பட்டு, அத்தொகையானது 18,695 துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உடனிருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...