குடியரசு தின விழாவை முன்னிட்டு அதிகாரிகளுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

நீலகிரி, ஜனவரி 09

குடியரசு தின விழாவையொட்டி, நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார். 



நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் (தெற்கு) கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலிங்கம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...