சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ இடையேயான போட்டி டிராவில் நிறைவு

கோவை, ஜனவரி 10

கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2017 நவம்பர் 25 ம் தேதியன்று துவங்கி வரும் 2018 மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகோ கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலை சிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்று (ஜன. 9) கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழக அணியின் 9-வது போட்டியில் நெரோகோ அணியை எதிர்த்து விளையாடியது. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் விளையாடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தினர். தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தை இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர்.

கோல் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இரு அணியின் கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜா-விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் காசோலையினை வழங்கி கவுரவித்தனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்தத் தொடர் முழுக்க சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் கோவையிலேயே நடைபெறவுள்ளது. சென்னை கால்பந்தாட்ட கழக அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமன், 4 தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. வரும் 20ம் தேதியன்று சென்னை அணிக்கும், கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற கேரள அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளதால் வழக்கத்தைவிட அன்று பார்வையாளர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...