கோவை விழாவின் இறுதிநாளில் 600 மாணவர்கள் பங்கேற்கும் ”சிலம்ப சங்கமம்” நிகழ்ச்சி

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை, ஜனவரி 10

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 12-ம் தேதி நிறைவடையும் இந்த விழாவை, பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஒருவார காலமாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சி, ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளான 12-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...