தற்காலிக ஓட்டுநராக அவதாரம் எடுத்த தேர்தல் நாயகன்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை, ஜனவரி 11

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முறையான அனுபவமற்ற இவர்களால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநராக அவதாரம் எடுத்துள்ளார் கோவையின் தேர்தல் நாயகன்.

மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தற்காலிக ஓட்டுநராகச் சேவை செய்வதாகக் கூறுகிறார் அந்த ஓட்டுநர் நூர் முகம்மது.



கோவை தேர்தல் களங்களில் நூர் முகம்மது-விற்கு தனி இடம் உண்டு. பெரிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றாலும், தனி மனிதராக அவரது பகுதிகளில் முடிந்தளவுக்கு கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு தோற்று இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் மனு தாக்கல் செய்யும் போது மாட்டு வண்டி, ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து மக்களை கவர்வதில் வல்லவர் இவர்.

பல முறை சாதனைக்காக தேர்தல்களில் நின்று இருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால், முதன் முறையாக மக்களின் மனதை வென்றிருக்கிறார்., தற்காலிக ஓட்டுநராக..!

அரசுப் பேருந்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தேர்தல் மன்னன் நூர் முகம்மது தற்காலிக ஓட்டுநராக ரயில் நிலையத்திலிருந்து, கணுவாய் வரை '11' எண் கொண்ட பேருந்தை கடந்த நான்கு நாட்களாக ஓட்டி வருகிறார்.

இது குறித்து அவர் நம் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேருந்து இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் பணி செய்பவர்கள் சுக, துக்கத்தைக் கடந்து பணிபுரிகின்றனர். அரசோடு இணைந்து மக்கள் செய்யும் பணியே மக்களாட்சி. மக்களுக்கான சேவையே மானிடத்தில் அளப்பரியது. மக்களுக்கு சேவை செய்யவே பேருந்து ஓட்டுகிறேன். இதன் மூலம் வரும் ஊதியப் பணத்தை ஆதரவற்றோருக்கு வழங்க உள்ளேன்" என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...