ஜெ., சிகிச்சை குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தது அப்பல்லோ

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

ஜனவரி 12

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில், டிடிவி தினகரன், மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் சேகரித்து வருகிறது.

இதனிடையே, விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு, அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2 வாரகால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற விசாரணை ஆணையம் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது. நீதிபதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் 2 பெரிய பெட்டிகளில் கொண்டு வரப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருதய நிபுணர் சுவாமிநாதன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...