ரயில்களில் குற்றச்சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்- ஏடிஜிபி சைலேந்திரபாபு

ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 12

ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.



கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நேரு கல்லூரியில் ஏர் ரைபிள் அகாடமியை, தமிழக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அதிக தங்கங்கள் கிடைத்து வருகிறது. இதுபோன்ற அகாடமிகள் சிறந்த வீரர்களை உருவாக்கும். 

ரயில்வேயில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. ரயில்வே போலீசாரின் சோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே குற்றங்களில் தொடர்புடைய வட மாநில குற்றவாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் பயணத்தில் அண்டை மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்புப் பாதை காவல்துறையில் போதுமான காவலர்கள் உள்ளனர். புலன் விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...