தவறவிட்டவரிடம் பணப் பையை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸுக்கு பாராட்டு

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.

உதகை, ஜனவரி 12

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார். 

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார். 

பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...