600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற ”சிலம்ப சங்கமம்” நிகழ்ச்சி

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை, ஜனவரி 12

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.  



கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது. சுமார் ஒருவாரமாக நடைபெற்ற இந்த விழாவை பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து விதவிதமாக  கொண்டாடினர்.  குறிப்பாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி, கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...