சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து ஆபரேசன் செய்த மருத்துவர்கள் : நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார்

கோவையில் சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை, ஜனவரி 13 

கோவையில் சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 



திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகன் விஷ்ணு (4). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடதுபுற சிறுநீரகம் சராசரி அளவை விட சிறியதாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறினர். 

இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் சிறுவன் கடும் வாயிற்று வலியால் அவதியுற்று வந்தார். .இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை, அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, வயிற்றுப் பகுதியில் ஒரு துணி மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட பஞ்சு இருந்தது தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு துணி மற்றும் பஞ்சினை அகற்றுமாறு கோரியதன் பேரில், அவற்றை மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் மருத்துவர்கள் அகற்றினர். 

இந்த நிலையில், தன் மகனுக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த மனுவில் இதுபோன்ற மருத்துவர்களை தண்டித்து, குழந்தைகள் வாழ்வில் விளையாடா வண்ணம் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...