ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு

ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

ஜனவரி 16 

ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். 

உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்வோரின் எண்ணிக்கை 1.75 லட்சமாக உயர்ந்து உள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் இவ்வளவு பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 2012–ம் ஆண்டு உச்சநீதிமன்றம், புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்கக் குழுவை அமைத்தது. இப்போது மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி மத்திய குழு வழங்கிய வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சமாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்குக் கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டது. கப்பல் வழியாக ஹஜ் புனித பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசுடன் இந்திய அரசு உடன்படிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...