பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 16 

பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, பத்மாவதி திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், அந்தப் படத்தை பெயரை பத்மாவத் எனப் பெயர் மாற்றம் செய்து காட்சிகள் ஏதும் நீக்காமல் வெளியிடப்பட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பத்மாவத் படத்தை திரையிட இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தப் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தின் பெயரை மட்டும் மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்திய தணிக்கைத் துறையின் தலைவர் பிரசன் ஜோஷி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் வகையில் அவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் படத்தை தடை விதித்தது போல தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தடை விதிக்காவிடில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். படத்தை வெளியிட விட மாட்டோம். இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...