டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி விடுதியில் திருப்பூர் மாணவர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஜனவரி 17

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.



கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...