பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார மாநாடு இன்று துவக்கம்

கோவை பேரூராதீனம் சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.


கோவை, ஜனவரி 17

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.



மாநாட்டில் இலங்கை, மொரிசியஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த பனை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை எடுத்துரைக்க உள்ளனர். இதன் முதல் நாளான இன்றைய நிகழ்வில், பனை படும் பாடு என்ற பாடல் தொகுப்பு, பனை பொருளாதாரம் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மேலும், பனை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்வு குறித்து ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், 'தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் அவைகள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. பனை மரத்தினை காக்கவும், தரிசு நிலங்களில் பனைமரம் வளர்ப்பதால் பனை சார்ந்த கிராம பொருளாதாரம் மேம்பட வாய்ப்பாக அமையும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க பனை மரங்களை மீண்டும் குளக்கரைகளில் நடவு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்றார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பனை மரம் குறித்த மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...