வங்கி கடனை ரத்துசெய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் மனு

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர், ஜனவரி 18

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...