ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாக டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதம்

ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 18

ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை முன்பாக உள்ள இரண்டு ஆவின் தேநீர் கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் அதிமுக-வின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தினகரன் ஆதரவாளருமான அன்னம்மாவிற்கு சொந்தமான கடையை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னம்மாள் மற்றும் தினகரன் அணியினர் ஆவின் கடை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து அன்னம்மாள் கூறுகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடையை அப்புறப்படுத்த விடமாட்டோம் என்றார்.

இதனிடையே, தினகரன் ஆதரவாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...