விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த ஆண் தற்கொலை முயற்சி

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 18

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (38). இவருக்கும் கோவையை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்ய சீதா முடிவு செய்ததாகத் தெரிகிறது. 

விவாகரத்து வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய்குமார் இன்று நீதிமன்றம் வந்தார். 

அப்போது, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு விஜய்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...