கோவையின் முன்னேற்றத்திற்கான "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் நண்பர்கள் சந்திப்பு

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 18

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.



நம்ம கோவை வாட்ஸ் ஆப் குழுவின் நிறுவனர் சி. கிஷோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தன்னார்வலர்களும், அதிகாரிகளும் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, அட்வைத் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிசாம், மாவட்டத்தின் மீதான கண்ணோட்டத்தையும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, சி.ஆர். சுவாமிநாதன், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் உள்ளிட்டோர் தங்களது பணிகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...