பியூஸ் மனுஷ் மீதான அவதூறு வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


கோவை, ஜனவரி 18

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டும் என்றே அவதூறான தகவல்களை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார். இதனையடுத்து, ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...