மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஜன.21-யில் துவக்கம்

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 19

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

கோவை சிலம்பாலையா அமைப்பு சார்பில் மகாகுரு சுழற்கோப்பைக்கான 5-ம் ஆண்டு சிலம்பாட்டப் போட்டிகள் வரும் 21-ம் தேதி புலியகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

இப்போட்டிகளில் மினி சப்-ஜூனியர் (6 வயதிற்குக் கீழ்) சப்-ஜூனியர் (14 வயதிற்குக் கீழ்), ஜூனியர் (17 வயதிற்குக் கீழ்) மற்றும் சூப்பர் சீனியர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

கோவையில் பத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்டக் குழுவினர் உள்ளனர். குழு போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புலியகுளத்தில் உள்ள காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் அல்லது 9443118510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 250 முதல் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் அன்று மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறும். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...