கோவை மாநகர காவல்துறையின் அதிரடி ஆக்‌ஷன் : ஒரே நாள் இரவில் விதி மீறல்களில் ஈடுபட்ட 2162 பேர் மீது வழக்கு, 117 பேர் கைது

கோவை மாநகர காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 வழக்குகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 117 பெரும் கைது செய்யப்பட்டனர்.


கோவை, ஜனவரி 19

கோவை மாநகர காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 வழக்குகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 117 பெரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று (ஜன.18) இரவு மாநகர் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையின் போது பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சாலைவிதிகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கூறுகையில், "மாநகரில் நேற்று இரவு 12 இடங்களில் பேரிகார்டு வைத்து தடுத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனையின் போது 63 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்திற்குரிய 172 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.



நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளின் அடிப்படையில், ஆதாயக்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சுதந்திரமாக சுற்றித்திரிந்த 53 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சூதாட்டம், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் என 2162 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது போன்ற அதிரடி சோதனைகள் கோவையில் அவ்வப்போது நடத்தப்படும். சோதனையின் போது தவிர மற்ற நேரங்களில் பேரிகார்டுகள் சாலையோரங்களில் வைக்கப்படும். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவே இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகருக்குள் வந்து செல்வோர் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.

கோவை மாநகர போலீசாரின் இந்த அதிரடி ஆக்‌ஷன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...