கூடலூரில் இயங்கி வரும் சல்லி கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 19

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி தனியார் சல்லிக் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் சல்லி துகள்கள் மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சுவாசக் கோலாரால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.



மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தூசி குடிநீரில் படிவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வீட்டுச் சாவியை ஒப்படைக்க முற்பட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...