ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மையத்தின் சார்பில் கோவை மாநகராட்சி ஆணையருக்கு விருது

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார்.


கோவை, ஜனவரி 20

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார். 



முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவாக ”கே.ஐ.ஜி.ஏ. 2018” (KIGA 2018) என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த ஆளுமைக்காக இந்த மாநாட்டில் விருது வழங்கப்படுகிறது. 3-வது முறையாக  டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மையத்தின் சிஇஓ ஸ்ரீஜன் பால்சிங், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் தயினேஷ்வர் எம். முலே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில், கோவில்பட்டியின் துணை மாவட்ட ஆட்சியரும், கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா விருது வழங்கிக் கவுரவித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...