ஆடி கோவையின் சார்பில் இரண்டாம் தலைமுறை ”ஆடி க்யூ5” அறிமுகம்

ஜெர்மன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, தனது புதிய இரண்டாம் தலைமுறை ”ஆடி க்யூ5”-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோவை, ஜனவரி 20

ஜெர்மன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, தனது புதிய இரண்டாம் தலைமுறை ”ஆடி க்யூ5”-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆடி க்யூ5 வகை கார் பந்தயத்தன்மை, பன்முக தன்மை, மிகவும் உயர்ந்த உள்அமைப்பு ஒருங்கிணைந்த நலனை தருகிறது. இணைப்பு திறன், செயல்திறன் மட்டுமின்றி, ஓட்டுநருக்கு உதவி செய்வதிலும் புதிய ஆடி க்யூ5, மீண்டும் ஒரு நிலையான நிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாட்ரோ சிஸ்டம், உயர்தர இன்ஜின், டேம்பர் கன்ட்ரோல், ஒருங்கிணைந்த தகவல்பொழுதுபோக்கு அம்சங்கள், புதிய ஆடி க்யூ5 ஒரு சிறப்பான வாகனம். புதிய ஆடி க்யூ5-யின் விலை ரூ.53,25,000 முதல் துவங்குகிறது.



ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி கூறுகையில், ‘‘2018  ஆண்டு ஆடியின் மிக முன்னேற்றமான ஆண்டு. இதற்கு மிகச்சரியான உதாரணம் புதிய ஆடி க்யூ5. முதல் ஆடி க்யூ5 பல ஆண்டுகளாக உலகில் சிறப்பான விற்பனையில் உள்ள மாடலாக இருந்தது. புதிய ஆடி க்யூ5 மூலம் இன்னும் சற்று உயர்வினை எட்டியுள்ளோம். இலகுரக எடையுடன், புதிய டிசைன், புதிய தகவல் பொழுதுபோக்கு அம்சங்கள், மற்றும் பல புதுமையான அம்சங்களைக் கொண்டுள்ளது. ரோட்டில் மட்டுமின்றி, ரோடற்ற இடங்களிலும் சிறப்பான ஓட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய க்யூ5 ஆடி ஒரு சிறந்த மாடல்,’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கடந்த 2009-ம் ஆண்டு சந்தையில் அறிமுகமானதிலிருந்து, ஆடி க்யூ5, பல இதயங்களை வென்றுள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளதுடன், சிறப்பான செயல் திறன், ஈடுஇணையற்ற பயண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு தரும்,’’ என்றார்.

ஆடி குழுமம் பற்றி

ஆடி குழுமம், ஆடி, டுகாட்டி மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட பல வெற்றிகரான வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவில் முதன்மையான நிறுவனம். உலகளவில் 12 நாடுகளில் 16 இடங்களில் தயாரிப்புகளையும், 100 இடங்களில் விற்பனையையும் கொண்டுள்ளது. ஆடி ஏஜியின் முழுமையான துணை நிறுவனங்களாக ஆடி ஸ்போர்ட்ஸ் ஜிஎம்பிஎச் (நெக்கர்ஸ்லாம்), ஆட்டோமொபைலி லம்பார்கினி எஸ்.பி.ஏ (சான்ட் அகட்டா போலோக்னீஸ், இத்தாலி) மற்றும் டுகாட்டி மோட்டார் ஹோல்டிங் எஸ்.பி.ஏ,(போலோக்னா, இத்தாலி) ஆகியவை உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டில் ஆடி குழுமும் 1.868 மில்லியன் ஆட்டோமொபைல் ஆடி பிராண்ட், 3,457 லம்போர்கினி பிராண்ட் பந்தயக்கார்கள், 5,5451 டுகாட்டி மோட்டார் சைக்கிள்களை கொண்டிருந்தது. ஆடி 59.3 பில்லியன் யூரோ டாலர் வணிகத்தில் 3.1 பில்லியன் லாபம் ஈட்டியிருந்தது. தற்போது இந்த நிறுவனத்தில் 88,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 60,000 பேர் ஜெர்மனியில் உள்ளனர்.  நிலையான உற்பத்தி மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களில் ஆடி தனது கவனத்தை செலுத்தி வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...