உதகையில் மந்தமாக நடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிகள்: வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை, ஜனவரி 20

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இச்சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மழைக்காலங்கள் இந்த அலுவலக சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீர் கால்வாய் பழுதுகாரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி விடும். இதனால், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இச்சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, சாலை தோண்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தோண்டப்பட்ட மண்களை நடைபாதையிலேயே கொட்டப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் சென்றுவர பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், நடைபாதையில் மண் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல இன்னல்களுக்கு மத்தியில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வரும் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...