வனப்பகுதியில் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை விட்டு செல்லும் அவலம் - அலட்சியமாகச் செயல்படும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், ஜனவரி 20

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இப்பகுதி வனத்தில் உயிர் வாழ்கின்றன. இவை, வனத்தில் உள்ள இலை, பழங்கள் மற்றும் மூங்கில் உள்ளிட்டவற்றை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. 

வனத்துறை சார்பில் மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கம். இவைகள், குளிர்காலத்தில் செடிகள் நடப்பட்டுத் தானாக வளா்ந்துவிடும். தற்போது, மாவட்ட வன அலுவலர் முகமது சகாப் உத்தரவின் பேரில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் பல இடங்களில் செடிகளை நட உத்தரவிட்டு தனியாரிடம் வேலைகளை ஒப்படைத்துள்ளார். 

இதனிடையே, தனியார் அமைப்புகள் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களைக் கொண்டு வனப்பகுதிக்குள் செய்ய வேண்டிய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



"வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன. இதனால், வனப்பகுதிக்குள் எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்லாதவாறு வனத்துறையினர் சோதனைச் சாவடியில் தீவிரமாக வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். ஆனால், பொதுமக்களை சோதனை செய்யும் அதிகாரிகள், வனப்பகுதிக்குள் செடிகளை நடுவதற்கு எடுத்து சென்ற 3,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கவா்களை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனால், வனவிலங்குகள் அதனை சாப்பிட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபோனறு அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்," என சமூக ஆர்வலர் மூர்த்தி கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...