அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நடிகர் மயில்சாமி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் மயில்சாமி முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பேருந்து கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மக்கள் வருத்தத்துடன் பேசுவது மன வேதனையளிக்கிறது. 

அரசு மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கிறது. முதலில் மக்களுக்கு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். மக்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு அரசை சரியான முறையில் கையாள தெரியவில்லை. அரசு என்பது மற்றொரு அரசுக்கு பணியக்கூடாது. ஆனால், தற்போது பணிகிறார்கள். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கவிஞர் வைரமுத்து இரண்டாவது நாளே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் தனது தாய் என்று கூறிய பின்பும் தொடர்ந்து விமர்சிப்பது பைத்தியக்காரத்தனம். நடிகர் கமல்ஹாசன், கலாம் சமாதியிலிருந்து அரசியல் துவங்குவதை வரவேற்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மாற்றம் உருவாகும். அதே வேளையில், அவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...