கள் இறக்கக் கட்டப்படும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மனு

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், ராமநாயக்கன்பாளையம், குண்டடம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த பானைகளை காவல்துறையினர் உடைத்ததுடன், விவசாய தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கள் இறக்க அனுமதியுள்ள நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை அமலில் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும், கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் இத்தகைய செயல் விவசாயிகளைப் பாதிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி பாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, கள் இறக்க தமிழக அரசு மறுக்கும் பட்சத்தில் மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தவும், வரும் 10-ம் தேதி கனியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வருவதாக வந்த தகவலையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....