கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



தெற்கு தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஒத்திகையின் போது, தீ விபத்து மற்றும் நிலநடுக்க காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் நடைபெறுகிறது? என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பேரிடர் தொடர்பான துண்டு பிரசுகரங்களை வழங்கினார். தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறு, வலை உபகரணங்கள் கொண்டு மீட்பது, திடீர் தீ விபத்து ஏற்படும் போது தீயை கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஊழியர்களே செய்து காட்டினர்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...