பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போராடி மீட்டது தீயணைப்புத்துறை

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் பகுதியில் பவானியாற்றில் நேற்று குளிக்க சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுழலில் சிக்கி ஆற்றின் மறு கரையில் கரையேறியுள்ளனர். 

ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரமாக ஆற்றைக்கடந்து வர இயலாமல் போராடினர். நேரம் ஆக-ஆக இருள் சூழ தொடங்கியதால் அச்சத்தில் ஆழ்ந்த மாணவர்கள் பலத்த சப்தம் எழுப்பியும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தும் உதவி கோரினர். 

இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

மாணவர்கள் இருந்த ஆற்றின் மறுகரை வனப்பகுதி என்பதாலும், இருள் சூழ்ந்த பின்னர் யானைகள் அங்கு நீர் அருந்த வந்ததாலும் அவர்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்க முடிவெடுத்தனர். ஆற்றின் வேகம் ஓரளவு குறைந்தவுடன் பரிசலின் உதவியோடு பிரவீன், கிள்ளிவளவன், முத்துகிருஷ்ணன், விவேக், கார்த்தி, இளமாறன், லெனின், அஜய்பிரவீன், தினேஷ்ராஜ், பிரனிஸ், ராஜ்குமார் என்ற பதினோரு மாணவர்களையும் இரவு பத்து மணியளவில் பத்திரமாக மீட்டனர். 



பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், அணையின் நீர் திறக்கப்படும் முன் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...